மோடி வெர்சன் 2.0

டெல்லி: 17ஆவது லோக்சபா தேர்தலில் ஆளும் பாஜக கூட்டிணி அமோகமாக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டதில் பெரும்பாலானவர்களுக்கு மகிழ்ச்சியே. அதே சமயத்தில் புதிய ஆட்சியில் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் சாதாரண மக்களுக்கும் மாதச் சம்பளதாரர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் என்ன செய்யப்போகிறது என்பது தான் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆளும் பாஜக கூட்டணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்த மாதச் சம்பளதாரர்களுக்கான ஐந்து லட்சம் வரையிலான வரிச்சலுகை திட்டம்தான் அது. அடுத்து தாக்கல் செய்யும் முழுமையான பட்ஜெட்டில் வரிச் சலுகை மேலும் உயர்த்தப்படுமா அல்லது அதே உச்ச வரம்பு தொடருமா என்பது மாதச் சம்பளதாரர்களின் மனதில் எழுந்துள்ள சந்தேகம்.   இடைக்கால பட்ஜெட் தாக்கலின்போது பேட்டியளித்த மத்திய நிதி அமைச்சராக இருந்த பியூஷ் கோயல், இது ட்ரெய்லர் தான், நடுத்தர மக்களும் புதிய நடுத்தர மக்களும் பயன்பெறும் வகையில் இன்னும் கூடுதலான வரிவிலக்கு திட்டங்களை செயல்படுத்த உள்ளோம் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *